Author: Editor web3
மாணவர்கள் Dropout சதவீதம் அதிகமாக இருந்ததே 2017 – 18ம் ஆண்டில் செங்கோட்டைய பள்ளி கல்வித்துறை அமைச்சராக இருந்தபோது தான் என்று விஜய்க்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலடி கொடுத்துள்ளார். ஈரோடு அருகே விஜயமங்கலம் சரளையில் த.வெ.க. சார்பில் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் கடந்த வியாழக்கிழமை (டிச.18 ) நடைபெற்றது. அப்போது பேசிய த.வெ.க தலைவர் விஜய், “தி.மு.க ஆட்சியில் எல்லாரும் டிகிரி படித்து முடித்து விட்டார்கள் என்று சொல்கிறார்கள். அது உண்மை என்றால் பள்ளிகளில் மாணவர்களின் இடைநிற்றல் அதிகமாக இருந்தது யாருடைய ஆட்சியில்? அரசுப் பள்ளியில் மாணவர்கள் யாரும் சேரவில்லை என்று 207 அரசுப் பள்ளிகள் மூடியது யாருடைய ஆட்சியில்” என்று கேள்வி எழுப்பினார். மேலும், “இதில் கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்று டிராமா வேறு போடுகிறார்கள்” என்று விஜய் கடுமையாக சாடினார். இந்தநிலையில், விஜய்யின் குற்றச்சாட்டு வருத்தமளிப்பதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். அதாவது, மாணவர்கள் Dropout…
சிரியாவில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் தளங்கள் மீது அமெரிக்கா நடத்திய பதிலடி வான்வழித் தாக்குதலில், 12க்கும் மேற்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் தளங்கள் அழிக்கப்பட்டன. .சிரியாவில் கடந்த 2019ம் ஆண்டுக்குப் பிறகு அமெரிக்கப் படையினர் மீது பெரிய அளவில் உயிரிழப்பை ஏற்படுத்தும் தாக்குதல்கள் எதுவும் நடைபெறாமல் இருந்தது. அங்குள்ள பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் அமெரிக்கா மற்றும் சிரியாவின் உள்ளூர் படைகள் இணைந்து செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், சிரியாவின் மத்தியப் பகுதியான பால்மைரா நகரில், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்கப் படையினர் மீது கடந்த 13ம் தேதி ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்த நபர் ஒருவர் மறைந்திருந்து திடீர் தாக்குதல் நடத்தினார். இந்தத் தாக்குதலில் இரண்டு அமெரிக்க ராணுவ வீரர்கள் மற்றும் ஒரு அமெரிக்க மொழிபெயர்ப்பாளர் என மொத்தம் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 வீரர்கள் படுகாயமடைந்த நிலையில், பதில் தாக்குதலில் அந்தப் பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். இச்சம்பவம் அதிபர் டிரம்புக்கு கடும்…
MGR பெயர் இருக்கக்கூடாது என்ற திமுகவின் யோசனையால் MGNREGA என காங்கிரஸ் பெயர் வைத்ததாக தம்பிதுரை எம்.பி. சாடியுள்ளார். ‘100 நாள் வேலைத் திட்டம் எனப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உத்தரவாத திட்டத்தின் பெயரை விபி-ஜி ஆர்ஏஎம் ஜி’ என மத்திய அரசு மாற்றியுள்ளது. இதுதொடர்பான மசோதவையும் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய மசோதா மீது மக்களவையில் காரசார விவாதம் நடைபெற்றது. மசோதாவின்படி இந்தத் திட்டத்திற்கு விக்சித் பாரத் ரோஜ்கர் மற்றும் ஆஜீவிகா மிஷன் (கிராமின்) என்று பெயரிடப்பட்டுள்ளது. இது சுருக்கமாக VB G RAM G என அழைக்கப்படுகிறது. இந்தநிலையில், மாநிலங்களவையில் VB G RAM G மசோதாவை ஆதரித்து பேசியபோது, “MGR பெயர் வந்துவிடக் கூடாது என்பதற்காகவே..”MGNREGA திட்டத்தில் MGNREGA என்பதில் N சேர்க்க காங்கிரஸுக்கு திமுக யோசனை கூறியதாக அதிமுக எம்.பி. தம்பிதுரை குற்றம்சாட்டியுள்ளார். அதாவது, எம்ஜிஆர் Mahatma Gandhi Rural…
பூஜையின் போது, தெய்வங்களுக்கு பல்வேறு பொருட்களை நாம் காணிக்கையாக வழங்குகிறோம். பூஜைக்குப் பிறகு, நெய், பூக்கள், சந்தனம், புனித நூல் மற்றும் வெற்றிலை போன்ற பல பொருட்கள் எஞ்சியுள்ளன. சில பொருட்கள் கடவுளுக்கு படைக்கப்பட்ட பிறகும் தீண்டப்படாமல் இருக்கும். எனவே, அவற்றை சுத்திகரித்து பூஜையில் மீண்டும் பயன்படுத்த முடியுமா என்று பலர் யோசிக்கிறார்கள். பூஜைப் பொருட்கள் குறித்து உங்களுக்கும் இதுபோன்ற சந்தேகங்கள் இருந்தால், எந்தப் பூஜைப் பொருட்களை மீண்டும் பயன்படுத்தலாம், எது பயன்படுத்தக்கூடாது என்பதை அறிந்து கொள்ளுங்கள். வழிபாட்டிற்கு வெள்ளி, பித்தளை அல்லது செம்பு பாத்திரங்களைப் பயன்படுத்தினால், அவற்றை மீண்டும் பயன்படுத்தலாம். அதேபோல், சிலைகள், மணிகள், சங்கு ஓடுகள், மந்திர மணிகள், சங்கு ஓடுகள் மற்றும் ஒரு இருக்கை போன்ற நீடித்த பொருட்களையும் மீண்டும் பயன்படுத்தலாம். இருப்பினும், காணிக்கை பொருட்கள், தண்ணீர், பூக்கள், மாலைகள், சந்தனக் குழம்பு, குங்குமம், ஊதுபத்திகள், தேங்காய், உடைக்கப்படாத அரிசி தானியங்கள் மற்றும் ஏற்றப்பட்ட விளக்கில் இருந்து மீதமுள்ள…
பிரதமர் நரேந்திர மோடியின் சமூக ஊடக செல்வாக்கு நிகரற்றதாகத் திகழ்கிறது. கடந்த ஒரு மாதத்தில், எக்ஸ் தளத்தில் அதிக ஈடுபாடு பெற்ற பதிவுகளில் அவரது பதிவுகளே ஆதிக்கம் செலுத்தியுள்ளன. இந்தியாவில் அதிகம் விரும்பப்பட்ட பத்து ட்வீட்களில் எட்டு அவரது பதிவுகளாகும். இந்தச் சாதனையை வேறு எந்த அரசியல் தலைவரும் நெருங்கக்கூட இல்லை. எக்ஸ் தளத்தின் புதிய “Most Liked” அம்சத்தின்படி, நாட்டில் அதிகம் விரும்பப்பட்ட முதல் 10 ட்வீட்களில் வேறு எந்த அரசியல் தலைவரின் பதிவுகளும் இடம்பெறவில்லை. பிரதமர் மோடியின் முக்கியப் பதிவுகளில் ஒன்றாக, இந்தியாவுக்கு வருகை தந்திருந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு இந்து சமய நூலான பகவத் கீதையின் ஒரு பிரதியை வழங்கிய பதிவு இடம் பெற்றது. அந்த பதிவு 6.7 மில்லியன் பேர் வரை சென்றடைந்து, 2.31 லட்சம் லைக்குகளைப் பெற்று மிக உயர்ந்த ஈடுபாட்டை பெற்றது. அந்த பதிவில் பிரதமர் எழுதியிருந்தது,“ரஷ்ய மொழியில் உள்ள கீதையின்…
தமிழகம் முழுவதும் நடைபெற்று வந்த வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகள்(SIR) நேற்றுடன் நிறைவடைந்திருக்கின்றன. இந்நிலையில் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, பீகார் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் அங்கு எஸ்ஐஆர் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இந்த பணிகள் காரணமாக சுமார் 60 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் விடுபட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. எனவே தேர்தலுக்கு முன்னர் இந்த பணிகளை மேற்கொள்வதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன. இருப்பினும் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் என 12 மாநிலங்களுக்கு எஸ்ஐஆர் பணிகள் கடந்த நவ.4ம் தேதி தொடங்கின . இந்த பணிகள் நிறைவடைந்திருக்கும் நிலையில் தற்போது மாவட்ட வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகியுள்ளது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று மதியம் 3 மணியளவில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். இந்த சிறப்பு திருத்தப் பணிகளின்போது, உயிரிழந்தவர்கள், முகவரி மாறியவர்கள், கண்டுபிடிக்க முடியாதவர்கள் மற்றும் இரட்டைப்…
செக் மோசடி வழக்கில் திரைப்பட இயக்குனர் லிங்குசாமிக்கு ஒரு வருட சிறை தண்டனை விதித்து சென்னை அல்லிகுளம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லிங்குசாமிக்கு சொந்தமான திருப்பதி பிரதர்ஸ் ஃபிலிம் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், பேஸ்மேன் ஃபைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திடம், கடந்த 2016-ஆம் ஆண்டு 35 லட்ச ரூபாய் கடனாக பெற்றிருந்தது. நீண்ட நாட்களாக இந்த கடன் தொகையை லிங்குசாமி செலுத்தாததால், கடன் தொகை வட்டியுடன் சேர்த்து 48 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் தற்போது உள்ளது. இதற்காக அளிக்கப்பட்ட காசோலை, பணம் இல்லாமல் திரும்ப வந்ததாக கூறி பேஸ்மேன் ஃபைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் உரிமையாளர் ராகுல் குமார் கடந்த 2018 ம் ஆண்டு சென்னை அல்லிக்குளம் நீதிமன்றத்தில் லிங்குசாமி, திருப்பதி ப்ரதர்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் சுபாஷ் சந்திர போஸ் ஆகியோர் மீது செக் மோசடி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை அல்லிக்குளம் நீதிமன்ற நீதிபதி மகாலட்சுமி,…
அண்ணா எம்ஜிஆர் உள்ளிட்ட தலைவர்களை யார் வேண்டுமானாலும் கொண்டாடலாம் ஆனால் மக்கள் இரட்டை இலைக்கு தான் ஓட்டு போடுவார்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, மதுரையில் நான்கு தொகுதிகள் போட்டியிடுவதற்கான விருப்பம் மனுவை சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இன்று இருக்கும் ஆட்சி யாருக்கும் பாதுகாப்பு இல்லை, ஊடகங்களுக்கு பாதுகாப்பு இல்லை நீதி அரசர்களுக்கு பாதுகாப்பு இல்லை, மக்களுக்கும் பாதுகாப்பில்லை என்று குற்றம்சாட்டினார். எம்ஜிஆர் ஜெயலலிதாவை நாங்கள பின்பற்றுகிறோம் என்று சொல்கிறார் விஜய் ? யார் வேண்டுமானாலும் சொல்லலாம், எம்ஜிஆரை புகழ் பாடாமல், அரசியலில் செல்வாக்கு பெற முடியாது. அது விஜயாக மட்டுமல்ல யாராக இருந்தாலும், முதலமைச்சரே இன்று எம்ஜிஆர் தன் பெரியப்பா என்று சொல்கிறார். எம்ஜிஆரை எதிர்க்கட்சிகளும் சரி புதிதாக கட்சி தொடங்கும் கட்சிகளும் சரி தங்கள் கட்சியை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என்றால்,…
திமுக ஆட்சிக்கு வந்து ஐந்தாவது ஆண்டு முடியப் போகும் நேரத்திலும், செவிலியர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, பணி நிரந்தரம் கோரி, சென்னை சிவானந்தம் சாலையில் போராட்டம் நடத்திய 1,500 க்கும் மேற்பட்ட செவிலியர்களை, மாலையில் கைது செய்து, நள்ளிரவில் கிளாம்பாக்கம் பஸ்ஸ்டாண்டில் கொண்டு போய் விட்டிருக்கிறது திமுக அரசு. இதனால், அதிகாலை நான்கு மணி வரை, கிளாம்பாக்கம் பஸ்ஸ்டாண்டில், செவிலியர்கள் தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்திருக்கிறார்கள். திமுக அரசின் இந்த அராஜகப் போக்கினை வன்மையாகக் கண்டிக்கிறேன். திமுக தனது தேர்தல் அறிக்கை வாக்குறுதி எண் 356 ல், தமிழகம் முழுவதும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் மருத்துவர்களும், செவிலியர்களும், பணி நிரந்தரம் செய்யப்படுவர் என்று கூறியிருந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்து ஐந்தாவது ஆண்டு முடியப் போகும் நேரத்திலும், இந்த வாக்குறுதியை நிறைவேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கொரோனா பெருந்தொற்று…
UPI மூலம் பணம் செலுத்தும்போது, கிரெடிட் வசதியையும் பயன்படுத்திக்கொள்ள முடிந்தால், அந்த அனுபவம் எவ்வளவு எளிதாகவும் புத்திசாலித்தனமாகவும் இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். இந்த தொலைநோக்குப் பார்வையை நிஜமாக்கும் வகையில், கூகுள் பே நிறுவனம் ஆக்சிஸ் வங்கியுடன் இணைந்து ஒரு கோ-பிராண்டட் கிரெடிட் கார்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இது பயனரின் யுபிஐ கணக்குடன் நேரடியாக இணைக்கப்படும். தனி அட்டை அல்லது கட்டண முறை எதுவும் தேவையில்லை—ஒரு க்யூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து, உங்கள் கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தலாம். ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் கேஷ்பேக் அல்லது வெகுமதிகள் கிடைக்கும், அவற்றை உங்கள் அடுத்த கட்டணத்திற்காக உடனடியாகப் பயன்படுத்திக்கொள்ளலாம். யுபிஐ-யின் எளிமையையும் கிரெடிட் கார்டின் செலவு வரம்புகளையும் இணைக்கும் NPCI-யின் ரூபே யுபிஐ மாதிரி மூலம் இந்த புதுமை சாத்தியமாகியுள்ளது. கூகுள் பேயின் இந்த கிரெடிட் கார்டின் முக்கிய அம்சம் என்னவென்றால் இதில் உடனடி கேஷ்பேக் மற்றும் வெகுமதி புள்ளிகள் கிடைக்கும். பொதுவாக,…