Author: editor5
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது மூன்று நாடுகள் சுற்றுப்பயணத்தின் முதல் கட்டமாக இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவுக்கு நேற்று வருகை தந்தார். இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ, பிரதமர் மோடிக்கு நாட்டின் உயரிய விருதான ‘பிந்தாங் அடிபூர்ணா ஆஃப் தி ரிபப்ளிக் ஆஃப் இந்தோனேசியா’ பதக்கத்தை வழங்கி கௌரவித்துள்ளார். பிரதமர் மோடி பயணித்த சிறப்பு விமானம் இந்தோனேசிய வான்வெளியில் நுழைந்ததும், அந்நாட்டின் அதிநவீன போர் விமானங்கள் பாதுகாப்பு அரணாகச் சூழ்ந்து விமான நிலையம் வரை அழைத்துச் சென்றன. வழக்கமாக வெளிநாட்டுத் தலைவர்களை வரவேற்க அதிபர் நேரில் வர வேண்டிய அவசியம் இல்லை என்றாலும், பிரதமர் மோடியின் மீதான மரியாதையின் அடிப்படையில் அதிபர் பிரபோவோ சுபியாண்டோ தானே விமான நிலையத்துக்கு வந்து உற்சாகமான வரவேற்பு அளித்தார். இந்த சிறப்பு வரவேற்பு இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவின் ஆழத்தை பிரதிபலிப்பதாகக் கருதப்படுகிறது. இரு தலைவர்களும் வர்த்தகம், ராணுவ ஒத்துழைப்பு, கடல்சார் பாதுகாப்பு, தொழில் முதலீடுகள்…
மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தலில் பெரும் தோல்விக்குப் பிறகு ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் (TMC) கட்சியில் ஏற்பட்டுள்ள உடைப்பு கட்சியின் எதிர்காலத்தையே கேள்விக்குள்ளாக்கியுள்ளது. மொத்தம் 80 எம்.எல்.ஏக்களில் 58 பேர் அதிருப்தியாளர்களாக மாறி தனித்து செயல்படத் தொடங்கியுள்ள நிலையில், மாநில சட்டமன்ற சபாநாயகர் அவர்களுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்கியுள்ளார். இந்த அதிருப்திக் குழுவின் தலைவரான ரிதர்பா எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அதிருப்தியாளர்கள், மம்தா பானர்ஜி உருவாக்கி வளர்த்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை முழுமையாகக் கைப்பற்றும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளனர். முதலில் கட்சியின் தலைமை அலுவலகத்தை கைப்பற்றிய அவர்கள், கட்சியின் சின்னம் மற்றும் அங்கீகாரம் தங்களுக்கே உரியது என தேர்தல் ஆணையத்துக்கு மனு அனுப்பியுள்ளனர். அந்த மனுவில், தற்போதைய கட்சித் தலைவர் மற்றும் நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிவடைந்துவிட்டதாக வாதிட்டுள்ளனர். மம்தா பானர்ஜி இந்த நடவடிக்கையை பாஜகவின் மறைமுக சதி எனக் கடுமையாக விமர்சித்துள்ளார். “தைரியம் இருந்தால் நேரடியாக பாஜகவில் சேர்ந்து என்னை எதிர்க்கட்டும்”…
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) தலைவர் தொல். திருமாவளவன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து முக்கிய விளக்கம் அளித்தார். அமைச்சரவையில் இடம்பெற்றதால் தங்கள் கட்சி கூட்டணியில் இணைந்துவிட்டதாக அர்த்தம் கொள்ளக் கூடாது என்பதை அவர் தெளிவுபடுத்தினார். திருமாவளவன் கூறியதாவது, “முதலமைச்சர் விஜய், கூட்டணி தொடர்பாக ஆதரவு அளிக்கும் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆனால், இதுவரை இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைமையில் இன்னும் முழுமையான கூட்டணி உருவாக்கம் நடைபெறவில்லை” என்றார். அமைச்சரவையில் விசிக பங்கேற்றதால் திமுகவுக்கு துரோகம் இழைத்துவிட்டதாக எழும் விமர்சனங்களை அவர் நிராகரித்தார். “இது தவறான புரிதல். திமுகவுடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நட்பு உறவு தொடர்ந்து வலுவாக உள்ளது” என்று வலியுறுத்தினார். மேலும், விசிகவில் இருந்து விலகிய ஒருவரை திமுக தனது கட்சியில் இணைத்துக்கொண்டது தங்களுக்கு அதிர்ச்சி அளித்ததாகவும் திருமாவளவன் தெரிவித்தார். இருப்பினும், இந்த சம்பவம் இரு கட்சிகளுக்கும் இடையிலான நீண்டகால உறவை பாதிக்காது…
தவெக ஆட்சியை கவிழ்க்க சதி திட்டம் தீட்டப்பட்டதாக எழுந்த பரபரப்பு குற்றச்சாட்டுகளில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோருக்கு அனுப்பப்பட்ட சம்மனை புறக்கணித்துள்ள நிலையில், அவர்கள் மீது அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து திருவல்லிக்கேணி போலீசார் உயர் அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவெக தலைவர் விஜய் தலைமையிலான அரசுக்கு எதிராக சதி திட்டம் தீட்டி, சில எம்.எல்.ஏ.க்களிடம் பணப் பேரம் நடத்த முயற்சி நடைபெற்றதாக அமைச்சர் நிர்மல்குமார் சில நாட்களுக்கு முன்பு பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். இந்த பின்னணியில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி தவெக எம்.எல்.ஏ. டாக்டர் இளையராஜா, தன்னிடம் ரூ.35 கோடி பேரம் பேசப்பட்டதாகக் கூறி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தினர். விசாரணையில், ஐ.பி.டி.எஸ். எனும்…
ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக தன் வாழ்நாள் முழுவதும் அர்ப்பணிப்புடன் போராடிய தீண்டாமை ஒழிப்புப் போராளி திவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசனின் 167வது பிறந்தநாளான இன்று, முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அவருக்கு அஞ்சலி செலுத்தினார். எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் பதிவிட்ட மு.க.ஸ்டாலின், “திராவிடமணி” எனப் போற்றப்படும் இரட்டைமலை சீனிவாசன், ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் உரிமைகளுக்காக உலக அளவில் குரல் கொடுத்த தலைவர் என்று புகழ்ந்தார். லண்டனில் நடைபெற்ற வட்ட மேசை மாநாட்டில் பங்கேற்ற அவர், பிரிட்டிஷ் மன்னர் ஐந்தாம் ஜார்ஜுடன் கைகுலுக்க மறுத்து, “நான் தீண்டத்தகாதவன்” என்று அறிவித்து, தீண்டாமையின் கொடுமையை உலகுக்கு உணர்த்திய துணிச்சலான செயல் வரலாற்றுப் புகழ் பெற்றது. 1859 ஜூலை 7ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே கோழியாளம் கிராமத்தில் பிறந்த இரட்டைமலை சீனிவாசன், இளம் வயதிலேயே சாதிய ஒடுக்குமுறையை நேரடியாக அனுபவித்தார். 1893ஆம் ஆண்டு ஆதி திராவிட மகாஜன சபையைத் தொடங்கி,…
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள அரசு பள்ளிக்கு சமீபத்தில் சென்ற பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கீர்த்தனா, அங்கு ஒரு மாணவியிடம் ஆங்கிலத்தில் கேள்வி எழுப்பினார். மாணவி சற்று தயக்கத்துடன் பதிலளிக்க முயன்ற காட்சி, ஊடகங்களால் பதிவு செய்யப்பட்டு சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவியது. இந்தச் சம்பவம் எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. திமுக இளைஞர் அணித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் அமைச்சரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்தனர். இந்த விமர்சனங்களுக்கு விரிவான பதிலளிக்கும் வகையில் அமைச்சர் கீர்த்தனா தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தான் ஒரு அரசு பள்ளி மாணவி என்பதையும், தமிழ் வழிக் கல்வியில் பயின்றவள் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார். “இன்று சிலர் ‘அரசு பள்ளி மாணவியை கேலி செய்தார்’ என்ற பொய்யான கதையைப்…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலவரப்பள்ளி அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வினாடிக்கு 1000 கன அடிக்கும் மேல் நீர் திறக்கப்படுகிறது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அத்துடன் ஆற்றில் ரசாயன நுரைகள் பெருக்கெடுத்து கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. பலத்த காற்றுக்கு இந்த ரசாயன நுரைகள் விவசாய தோட்டங்களுக்குள்ளும், சாலையில் செல்லும் பொதுமக்கள் மீதும் விழுவதால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். கர்நாடகா மாநிலம் பெங்களூரு பகுதியில் இருந்து சுத்திகரிக்கப்படாத தொழிற்சாலை மற்றும் குடியிருப்பு கழிவுநீர் தென்பெண்ணை ஆற்றில் கலப்பதால் இந்த நுரை ஏற்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஓசூர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வும் முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணாரெட்டி, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுடன் அப்பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், “கர்நாடகா பெங்களூருவில் இருந்து ஆண்டு முழுவதும் ரசாயன கழிவுநீர் தான் தென்பெண்ணை ஆற்றில் வருகிறது. இந்த நீரை பாசனத்திற்கு பயன்படுத்தினால்…
ஜோலார்பேட்டை அருகே இன்ஸ்டாகிராம் பார்த்ததை பெற்றோர்கள் கண்டித்ததால், பிளஸ் டூ மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரும்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பால்னங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சுபாஷ். இவரது மகள் சுதா (17) என்பவர் அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்தார்.இந்நிலையில் நேற்று மாலை சுதா வீட்டில் செல்போனில் இன்ஸ்டாகிராம் பார்த்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது பெற்றோர்கள் படிக்காமல் செல்போன் எதற்கு பார்க்கிறாய் என கேட்டு கண்டித்ததாக தெரிகிறது.இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சுதா வீட்டின் அறைக்கு சென்று கதவை சாத்தியுள்ளார். பின்னர் இதை அறிந்த பெற்றோர்கள் சுதாவை கதவை திறக்க கோரி சத்தம் போட்டு உள்ளனர். ஆனால் திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்றபோது தூக்கிட்டு தொங்கிய நிலையில் கிடந்த சுதாவை அவரது குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். பின்னர் அங்கிருந்து…
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் நட்சத்திரமுமான எம்.எஸ். தோனிக்கு 45வது பிறந்தநாள் வாழ்த்துக்கள்! ராஞ்சியில் 1981ம் ஆண்டு ஜூலை 7ம் தேதி அன்று பிறந்த மகேந்திர சிங் தோனி (MS Dhoni) இன்று தனது 45வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு இந்த இனிய நாளில் முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள், ரசிகர்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்திய கிரிக்கெட்டின் ‘கேப்டன் கூல்’ என்று அழைக்கப்படும் அவர், உலக கிரிக்கெட் வரலாற்றில் ஒரு புரட்சியை ஏற்படுத்திய வீரர். ரயில்வே டிக்கெட் புக் செய்யும் ஊழியராக இருந்து, உலகின் மிகச் சிறந்த விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனாகவும், வெற்றிகரமான கேப்டனாகவும் உயர்ந்த அவரது பயணம் இளைஞர்களுக்கு உத்வேகம் அளிப்பதாக உள்ளது. தோனியின் ஆரம்ப காலம் மற்றும் அறிமுகம்: பீகார் (தற்போதைய ஜார்கண்ட்) மாநிலத்தைச் சேர்ந்த தோனி, தனது இளம் வயதில் கால்பந்து மற்றும் பேட்மிண்டன் விளையாடியவர். இவரது பள்ளிப்படிப்பை…
செங்கல்பட்டு மாவட்டம், பரனூர் அருகே சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையொட்டி அமைந்துள்ள காப்புக் காட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ வேகமாக பரவியதால் காப்புக் காடு முழுவதும் புகை சூழ்ந்தது. விண்ணை முட்டும் அளவுக்கு கரும்புகை பரவியதால், தேசிய நெடுஞ்சாலையில் பயணித்த வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மூச்சுத் திணறல், கண் எரிச்சல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு ஆளாகி கடும் சிரமத்தை சந்தித்தனர். பரனூர் ரயில் நிலையம் மற்றும் சென்னை–திருச்சி தேசிய நெடுஞ்சாலை இடைப்பட்ட பகுதியில் ஏற்பட்ட இந்த தீ விபத்தால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. மேலும், அடர்ந்த புகை காரணமாக வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.