Author: Editor web3
2024-25 நிதியாண்டில் 16 சதவீத பொருளாதார வளர்ச்சி விகிதத்தை அடைந்து, இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளதாக ரிசர்வ் வங்கி புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது. ரிசர்வ் வங்கி வெளியிட்ட சமீபத்திய அறிக்கையின்படி, முக்கிய மாநிலங்களில் தமிழ்நாடு அதிகபட்ச மொத்த உள்நாட்டு உற்பத்தி (GSDP) வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது, இது முந்தைய ஆண்டை விட கிட்டத்தட்ட 16 சதவீதம் அதிகரித்து, மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தை முந்தியுள்ளது. ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட ‘இந்திய மாநிலங்கள் குறித்த புள்ளிவிவரக் கையேடு, 2024-25’ என்ற அறிக்கை, தமிழ்நாடு தனிநபர் வருமானத்தில் கூர்மையான உயர்வைப் பதிவு செய்து, நாட்டின் உயர் வருமானப் பொருளாதாரங்களில் ஒன்றாக அதன் நிலையை வலுப்படுத்தியுள்ளது என்பதைக் காட்டுகிறது. தமிழ்நாடு தற்போதைய விலையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GSDP) 2023-24 ஆம் ஆண்டில் ரூ.26.88 லட்சம் கோடியிலிருந்து 2024-25 ஆம் ஆண்டில் ரூ.31.18 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இதன்மூலம், தமிழ்நாடு தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக அதிக வேகமான பொருளாதார…
முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் தனிமைச் சிறைவாசம் மற்றும் மனிதாபிமானமற்ற தடுப்புக்காவலை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவருமாறு பாகிஸ்தானிடம் ஐ.நா. சிறப்பு நடைமுறைகளின் நிபுணர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இம்ரான் கான் செப்டம்பர் 26, 2023 முதல் ராவல்பிண்டியின் அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் நீண்ட கால தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வெளி உலகத்துடனான தொடர்பு மிகவும் குறைவாகவே உள்ளது. அந்த அறை தொடர்ந்து கேமரா கண்காணிப்பில் உள்ளது. இயற்கை ஒளி மற்றும் காற்றோட்டம் குறைவாக உள்ளது. கோடை மற்றும் குளிர்காலத்தில் வெப்பநிலை உச்சத்தை எட்டும். காற்றோட்டம் இல்லாததால் துர்நாற்றம் மற்றும் பூச்சி தொல்லைகள் ஏற்படும். இம்ரான் வாந்தி, குமட்டல் மற்றும் எடை இழப்பு ஆகியவற்றால் அவதிப்படுகிறார். வெளியே நடக்கவோ, மற்ற கைதிகளைச் சந்திக்கவோ அல்லது சபை பிரார்த்தனைகளில் பங்கேற்கவோ அவருக்கு அனுமதி இல்லை. வழக்கறிஞர்கள் மற்றும் குடும்பத்தினருடனான சந்திப்புகள் அடிக்கடி தடைபடுகின்றன அல்லது முன்கூட்டியே நிறுத்தப்படுகின்றன என்ற் கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஐக்கிய நாடுகள்…
காற்று மாசுபாடு விவகாரத்தில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் ஒருவரையொருவர் குற்றம்சாட்டாமல், ஒன்றாக இணைந்து தீர்வை கொண்டுவர வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரின் 10வது நாளில் , எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, டெல்லி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நிலவி வரும் காற்று மாசுபாடு குறித்த கேள்விகளை எழுப்பினார். அப்போது பேசிய அவர், நான் டெல்லி மற்றும் முக்கிய நகரங்களைப் பற்றிப் பேசுகிறேன். இது அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணையக்கூடிய ஒரு பிரச்சினை . நமது எதிர்காலம் சேதமடைந்து வருகிறது, மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள், குழந்தைகள் அவதிப்படுகிறார்கள், நாங்கள் சுவாசிக்க முடியவில்லை. இது நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என்று நான் பரிந்துரைத்தேன் என்று கூறினார். ” இந்தப் பிரச்சினையில் அனைவரும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டுவதற்குப் பதிலாக ஒருமித்த கருத்துடன் விவாதிக்க வேண்டும். இது எதிர்காலத்தின் விஷயம். நிபுணர்களின் ஆலோசனையைப் பெற்று, நாங்களும் இணைந்து செயல்படுவோம். சரியான திட்டம்…
ரேஷன் கடைகளுக்கு 2026-ம் ஆண்டு விடுமுறை தினங்கள் குறித்து உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது. ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மத்திய, மாநில அரசுகள் மானிய விலையில் ரேஷன் கடைகள் மூலம் உணவு பொருட்களை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, சர்க்கரை, கோதுமை, பாமாயில் உள்ளிட்ட பொருட்களை விநியோகம் செய்யப்படுகிறது. இந்தநிலையில், தமிழ்நாட்டில் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் ஒவ்வொரு ஆண்டும் விடுமுறை தினங்கள் குறித்த அறிவிப்பு டிசம்பர் மாதம் வெளியிடப்படும். அந்த வகையில் தமிழ்நாட்டில் பொது வினியோகத் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் 2026-ம் ஆண்டிற்கான பொது/பண்டிகை விடுமுறை தினங்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஜனவரி 1ம் தேதி (வியாழக்கிழமை) – ஆங்கில புத்தாண்டு, ஜனவரி 15 (வியாழக்கிழமை) – பொங்கல் பண்டிகை, ஜனவரி 16 (வெள்ளிக்கிழமை) -திருவள்ளூர் தினம், ஜனவரி 17 (சனிக்கிழமை) – உழவர்…
தமிழ்நாட்டில் அரியலூர்,பெரம்பலூர், திருவண்ணாமலை, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் அதிகமாக பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு அரசு பன்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் சார்பாக உலக எய்ஸ்ட் தினம் – 2025 ஒட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த ஒர் ஆண்டுக்காலங்களில் சிறந்த எச்.ஐ.வி பரிசோதனை மையம் மற்றும் எச்.ஐ.வி குறித்தான விழப்புணர்வை ஏற்படுத்தும் NGO களுக்கு விருதுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. பின்னர் எச்.ஐ.வி விழிப்புணர்வு குறித்தான உறுதிமொழி எடுக்கப்பட்டது. மேலும் எச்.ஐ.வி.குறித்தான விழிப்புணர்வு காணொளி காட்சிப்படுத்தப்பட்டது. இந்நிகழ்வில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துறை செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும் மருத்துவ கல்லூரி மாணவர்களும் கலந்து…
2025 யு19 ஆசியக்கோப்பை தொடரின் யுஏஇ அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வைபவ் சூர்யவன்ஷியின் மிரட்டல் ஆட்டத்தால் இந்திய அணி 433 ரன்கள் எடுத்துள்ளது. ஆண்கள் 19 வயதுக்குட்பட்ட ஆசிய கோப்பை 2025 இந்தியாவுக்கு சிறப்பான தொடக்கமாக அமைந்தது. துபாயில் உள்ள ஐ.சி.சி அகாடமி மைதானத்தில் நடந்த முதல் போட்டியிலேயே இந்திய அணியின் இளம் தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி அபாரமாக விளையாடினார். டி20 வடிவத்தில் தொடர்ந்து முன்னிலை வகித்த சூர்யவன்ஷி, இப்போது ஒருநாள் போட்டியிலும் தனது பேட்டிங் திறமையை வெளிப்படுத்தியுள்ளார், 2025 யு19 ஆசியக்கோப்பை தொடர் இன்று (டிசம்பர் 12) தொடங்கி டிசம்பர் 21ஆம் தேதிவரை துபாயில் நடைபெறுகிறது. இதில், இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாள், மலேசியா, யுஏஇ, இலங்கை உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின. இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு குரூப் ஏ-ல் இந்தியா, பாகிஸ்தான், யுஏஇ, மலேசியா அணிகளும், குரூப் பி-ல் வங்கதேசம், ஆப்கானிஸ்தான், இலங்கை,…
பிரபல குத்துச்சண்டை வீராங்கனை வினேஷ் போகத், ஒலிம்பிக் கனவை தொடரும் நோக்கத்துடன் ஓய்வு முடிவை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார். 31 வயது வினேஷ் போகத், கடந்த ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 50 கிலோ ஃப்ரீஸ்டைல் மல்யுத்தப் போட்டியின் இறுதிப் போட்டியை எட்டியிருந்தார். ரவுண்ட்-16 போட்டியில் ஜப்பானின் யுய் சுசாகியை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். ஆனால், இறுதிப் போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட எடையை விட 100 கிராம் அதிகமாக இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து, மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியில் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமையைப் பெறும் நிலையில், அவரது கனவு நொறுங்கியது. இதையடுத்து, அரசியலில் களமிறங்கிய அவர், ஹரியானா மாநிலத்தின் ஜூலானா தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தநிலையில், தான் அறிவித்திருந்த ஓய்வு முடிவை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளார்.…
ஆண்டு முழுவதும் இந்தியர்களிடையே ஆரோக்கியம் மிகப்பெரிய கவலைகளில் ஒன்றாக உள்ளது . நீரிழிவு நோய் முதல் உடல் பருமன் வரை, கிட்டத்தட்ட ஒவ்வொரு இந்திய வீட்டிலும் பல நோய்கள் பொதுவானதாகிவிட்டன. டிஜிட்டல் ஆதிக்கம் செலுத்தும் இந்த சகாப்தத்தில், ஒவ்வொரு சாதாரண மனிதனும் முதலில் அறிகுறிகளை “கூகிளில்” தேடுகிறார்கள். அந்தவகையில், 2025 ஆம் ஆண்டு இன்னும் சில நாட்களில் முடியப் போகிறது. ஒவ்வொரு ஆண்டையும் போலவே, இந்த ஆண்டும் சுகாதாரக் கண்ணோட்டத்தில் மிகவும் முக்கியமானது. முன்பு, எடையைக் குறைப்பது எப்படி, நீரிழிவு அறிகுறிகள் போன்ற கேள்விகளை கூகுளில் தேடுவது பொதுவானது. ஆனால் இப்போது டிஜிட்டல் யுகம் நோய்களைக் கூட மாற்றியுள்ளது. ஆண்டு முழுவதும் கூகுளிடம் மக்கள் கேட்ட 10 கேள்விகள் என்ன என்பதை தெரிந்துகொள்வோம். சாதாரண சர்க்கரை என்றால் என்ன? இந்த வருடம் நீரிழிவு நோய்தான் அதிகம் கேட்கப்பட்ட கேள்விகளில் ஒன்றாகும். வெறும் வயிற்றில் இரத்த சர்க்கரை அளவு 70-100 மி.கி.க்கு இடையில்…
ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் மக்களவை எம்.பி.க்கள் கூட்டத்தில் எம்.பி. சசி தரூர் கலந்து கொள்ளாதது பேசுப்பொருளாகியுள்ளது. காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் முக்கிய கட்சி கூட்டங்களில் தொடர்ந்து கலந்து கொள்ளாதது காங்கிரசுக்குள் அமைதியின்மையை ஏற்படுத்தியுள்ளது, அவரது உறுதிப்பாடு குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்தநிலையில், இன்று ராகுல்காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியின் மக்களவை எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சசி தரூர் கலந்துகொள்ளவில்லை. இதனால், முக்கிய விவாதங்களில் அவர் தொடர்ந்து கலந்து கொள்ளாதது குறித்து காங்கிரஸ் கட்சிக்குள் மீண்டும் கேள்விகள் எழுந்தன. தரூர் முன்கூட்டியே தலைமைக்கு தகவல் தெரிவித்ததாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தாலும், அவர் கலந்து கொள்ளாததற்கான காரணம் தனக்குத் தெரியாது என்று காங்கிரஸ் தலைமை கொறடா தெரிவித்துள்ளார். மக்களவையில் திருவனந்தபுரம் தொகுதியின் பிரதிநிதியான சசி தரூர், சண்டிகர் எம்.பி. மணீஷ் திவாரியுடன் சேர்ந்து கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. அவரது பொது நிகழ்ச்சி நிரலின்படி, தரூர் நேற்று இரவு…
சென்னையில் கணவருடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக பிபி மாத்திரையை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு சீரியல் நடிகை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரையுலகில் பெண் நடிகைகள் மற்றும் துணை நடிகைகள் கடினமாக உழைத்து முன்னேறி வருகின்றனர். ஆனால், குடும்ப சிக்கல் அல்லது வேறு ஏதேனும் பிரச்னைகளால் தற்கொலைக்கு முயற்சிக்கின்றனர். இதுபோன்ற செய்திகள் பலருக்கும் அதிர்ச்சியை தருகிறது. தற்கொலை என்பது தொடர்கதையாகி வருகிறது. நடிகர் சாய் பிரஷாந்த் தொடங்கி VJ சித்ரா வரை இதுபோன்ற அதிர்ச்சிகரமான முடிவுகளை எடுத்த எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில், விஜய் டிவியில் சிறகடிக்க ஆசை, பாக்கியலட்சுமி உள்ளிட்ட சீரியலில் நடித்த நடிகை ராஜேஸ்வரி(39) கணவருடன் ஏற்பட்ட குடும்ப பிரச்னை காரணமாக தற்கொலை செய்துகொண்டுள்ளார். சென்னை பிராட்வே தாயப்பன் முதலித் தெருவில், சீரியல் நடிகை ராஜேஸ்வரி (39) மற்றும் சதீஷ் இருவரும் கடந்த 24 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டு,…