Author: Editor web3

பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நேற்று நிறைவடைந்த நிலையில் கூட்டத்தொடர் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏப்.16ல் நாடாளுமன்றம் மீண்டும் கூடுகிறது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 28ம் தேதி குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கி பிப்ரவரி 13ம் தேதியுடன் முடிவடைந்தது. இதனை தொடர்ந்து பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது கட்ட அமர்வு மார்ச் 9ம் தேதி தொடங்கி நேற்று வரை நடைபெற்றது. அப்போது அவையில் பேசிய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ சபை ஒத்திவைக்கப்படுவதாகவும் மிக முக்கியமான மசோதாவிற்காக விரைவில் அவை மீண்டும் கூடும் என்றும் அவர் தெரிவித்தார். அவையின் திட்டம் குறித்து காங்கிரஸ் எம்பி ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த கிரண் ரிஜ்ஜூ ஆந்திரப்பிரதேச மறுசீரமைப்பு திருத்த மசோதா, ஜன் விஸ்வாஸ் (விதிமுறைகள் திருத்தம்) மசோதா ஆகியவற்றை நிறைவேற்றுவதற்காக அவை எடுத்துக்கொள்ளும் என்றார். அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களில் மிக முக்கியமான மசோதாவை நாங்கள் கொண்டு…

Read More

இந்தியா தனது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அணுசக்தி மூலம் இயங்கும் பாலிஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பலான ஐஎன்எஸ் அரிதமான், இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது. இந்தியாவின் ‘அணுசக்தி முக்கோண’ (Nuclear Triad) வலிமையில் கடல்வழித் தாக்குதல் திறனை இது மேலும் உறுதிப்படுத்துகிறது. ஏற்கனவே சேவையில் உள்ள ஐஎன்எஸ் அரிகாந்த் மற்றும் ஐஎன்எஸ் அரிகாத் ஆகியவற்றைத் தொடர்ந்து, இந்தியக் கடற்படையில் இணையும் மூன்றாவது அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் இதுவாகும். அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் திட்டத்தைப் பொறுத்தவரை, இந்தியா அதனை மிகவும் ரகசியமான மற்றும் பாதுகாக்கப்பட்ட ஒரு திட்டமாகவே  பராமரித்து வருகிறது. இதன் மூலம் அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் சீனா ஆகிய நாடுகளைத் தொடர்ந்து, அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களைக் கொண்டுள்ள உலகின் ஒரு சில முக்கிய நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது. இந்தியாவின் முதல் உள்நாட்டு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலான ஐஎன்எஸ் அரிகாந்த் (INS Arihant), ஜூலை 2009-ல் அறிமுகப்படுத்தப்பட்டு 2016-ல் அமைதியான…

Read More

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி தனது 28 தொகுதிகளில் 27 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் தற்போதைய எம்.எல்.ஏ-க்கள் 12 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை ஸ்ரீபெரும்புதூர் தொகுதியிலும், துரை சந்திரசேகர் பொன்னேரியிலும், ஹசன் மௌலானா வேளச்சேரியிலும் மீண்டும் களம் காண்கின்றனர். அதேபோல், திருநாவுக்கரசரின் மகன் ராமச்சந்திரன் அறந்தாங்கியிலும், மாங்குடி காரைக்குடியிலும், ரூபி மனோகரன் நாங்குநேரியிலும் போட்டியிடுகின்றனர். விளவங்கோடு எம்.எல்.ஏ-வான தாரகை கத்பர்ட் இம்முறை குளச்சல் தொகுதிக்கு மாற்றப்பட்டுள்ளார். விளவங்கோட்டில் விஜயதாரணி போட்டியிடுகிறார். அதே சமயம், மயிலாடுதுறை ராஜ்குமார், குளச்சல் பிரின்ஸ் உள்ளிட்ட 5 தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறையில் சிட்டிங் எம்எல்ஏ ராஜ்குமாருக்குப் பதிலாக ஜமால் யூனஸ் முகமது போட்டியிடுகிறார். உதகை தொகுதியில் முன்னாள் எம்எல்ஏ பி. ராமசந்திரனுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது. தொகுதிப் பங்கீட்டு…

Read More

ஈரானில் இருந்து இந்தியா நோக்கி கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பல் திடீரென தனது பயணப் பாதையை மாற்றி சீனாவுக்குச் சென்று கொண்டிருப்பது சர்வதேச எரிசக்தி சந்தையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரானில் இருந்து கச்சா எண்ணெயுடன் குஜராத்தின் வாடினார் (Vadinar) துறைமுகத்திற்கு வந்து கொண்டிருந்த ‘பிங் ஷுன்’ (Ping Shun) என்ற கப்பல், இந்தியாவை நெருங்கிய நிலையில் திடீரென தனது திசையை மாற்றியுள்ளது. தற்போது இந்தக் கப்பல் சீனா நோக்கிச் செல்வதற்கான சமிக்ஞைகளை (Signals) அனுப்பி வருவதாக கப்பல் போக்குவரத்து தரவு நிறுவனமான Kpler தெரிவித்துள்ளது. இந்தக் கப்பல் இந்தியா வந்திருந்தால், கடந்த ஏழு ஆண்டுகளில் ஈரான் கச்சா எண்ணெயை இந்தியா வாங்குவது இதுவே முதல் முறையாக இருந்திருக்கும். 2019-இல் அமெரிக்கத் தடைகள் காரணமாக இந்தியா ஈரான் எண்ணெயை இறக்குமதி செய்வதை நிறுத்தியது. 2002-இல் கட்டப்பட்ட இந்த ‘பிங் ஷுன்’ கப்பல், 2025-ஆம் ஆண்டு அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளுக்கு உள்ளான…

Read More

இந்தியன் பிரீமியர் லீக்கின் 19வது பதிப்பு நடைபெற்று வருகிறது. ஒரு ஐபிஎல் போட்டியின் குறிப்பிட்ட செலவுகள் உங்களுக்குத் தெரியுமா? அதன் மொத்த செலவு என்ன? தெரிந்து கொள்ளுங்கள். இந்தியன் பிரீமியர் லீக்கின் 19வது சீசன் நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் இதுவரை ஐந்து போட்டிகள் விளையாடப்பட்டுள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸை படுதோல்வி அடையச் செய்த பிறகு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புள்ளி அட்டவணையில் முதலிடத்தில் உள்ளது. முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்திய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராகவே சிஎஸ்கே-வின் இன்றைய இரண்டாவது போட்டி நடைபெறுகிறது.   இந்தியன் பிரீமியர் லீக் 2008 முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஒவ்வொரு ஆண்டும் இந்த லீக்கை நடத்துகிறது, இது தற்போது உலகின் மிகப்பெரிய டி20 லீக் ஆகும். இந்த லீக் மூலம் வாரியம் கணிசமான வருவாயையும் ஈட்டுகிறது. ஸ்பான்சர்ஷிப், ஊடக உரிமைகள் மற்றும் டிக்கெட் விற்பனை ஆகியவை இதன்…

Read More

தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் நீண்ட இழுபறிக்குப் பிறகு வெளியாகியுள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பெயர் அதில் இடம்பெறாதது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அண்ணாமலை கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட விரும்புவதாகவும், ஆனால் கட்சித் தலைமை வானதி சீனிவாசனுக்கே மீண்டும் அங்கு வாய்ப்பளிக்க முடிவு செய்ததாலும் இருதரப்புக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவியதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே அண்ணாமலை சமீபத்திய கட்சி ஆலோசனைக் கூட்டங்கள் மற்றும் பிரதமரின் கோவை வருகையைப் புறக்கணித்ததாகத் தகவல்கள் வெளியாகின. மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிடுமாறு தலைமை வலியுறுத்தியும், தான் கேட்ட தொகுதி கிடைக்காததால் அவர் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்ற முடிவை எடுத்ததாகத் தெரிகிறது. இந்தநிலையில், இன்று வெளியாகியுள்ள பட்டியலில், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சாத்தூர் தொகுதியிலும், மத்திய இணையமைச்சர் எல். முருகன் அவிநாசி தொகுதியிலும் களம் காண்கின்றனர். மயிலாப்பூர் தொகுதியில் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும்…

Read More

சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் 27 தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் இம்முறை ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 28 தொகுதிகள் பட்டியலையும் திமுக தலைமை கடந்த மார்ச் 28 ஆம் தேதியே அறிவித்துவிட்டது. திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் வேட்பாளர்களை அறிவித்து, பல கட்சி வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்து வரும் நிலையில், காங்கிரஸ் இன்னும் வேட்பாளர்களை அறிவிக்காமல் இருந்தது. வேட்பு மனு தாக்கள் தொடங்கி 4 நாட்கள் ஆகும் நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில்  இழுபறி நீடித்து வந்தது, இந்தநிலையில் வேட்பாளர் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. ஸ்ரீபெரும்புதூர் – செல்வப்பெருந்தகை பொன்னேரி – துரை சந்திரசேகர் வேளச்சேரி – ஹசன் மௌலானா சோளிங்கர் – முனி ரத்னம்…

Read More

தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணியில் ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதிக்கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதிமுக, பாஜக சார்பில் தலா ஒரு தொகுதி புதிய நீதிக்கட்சிக்கு வழங்கப்பட்டது. அதிமுக சார்பில் மதுரை மத்திய தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் வேட்பாளராக இயக்குநரும், நடிகருமான சுந்தர் சி-யை புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் அறிவித்துள்ளார். திமுகவின் அறிவு முகமாக உள்ள பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை மதுரை மத்திய தொகுதியில் வீழ்த்துவது சாதாரண காரியமல்ல என்பதை உணர்ந்த ஏ.சி. சண்முகம், அவர் சார்ந்த அதே பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்த சினிமா பிரபலம் சுந்தர் சி-யை களமிறக்கி உள்ளார். மதுரை மத்தியில் பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் கணிசமாக உள்ளனர். அவர்களின் வாக்குகள் முழுமையாக பிடிஆர் பக்கம் செல்ல விடாமல் தடுக்கவும் சுந்தர் சி களமிறக்கப்பட்டுள்ளார்.  சுந்தர்.சி மதுரை மத்திய தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். இந்தநிலையில், நீண்ட இழுபறிக்கு பிறகு…

Read More

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், அதிமுக-பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில்பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. சட்டமன்றத் தேர்தலையொட்டி, அரசியல் கட்சியினர் வேட்பாளர்கள் அறிவிப்பு, தொகுதி ஒதுக்கீடு பணிகளில் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், கட்சிக்குள் சில அதிருப்திகளும் கிளம்பியுள்ளன. அந்தவகையில், அமமுகவின் முக்கியத் தூண்களாகக் கருதப்பட்ட சோளிங்கர் பார்த்திபன் (ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர்) மற்றும் கோ.தண்டபாணி (செங்கல்பட்டு மாவட்டச் செயலாளர்) ஆகிய இரண்டு முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், அக்கட்சியிலிருந்து விலகி இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். தேர்தல் நேரத்தில் மாவட்டச் செயலாளர்கள் அந்தஸ்தில் உள்ள இருவர் ஆளுங்கட்சியில் ஐக்கியமானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விலகலுக்குப் பின்னணியில் தொகுதிப் பங்கீடு குறித்த அதிருப்தி இருப்பதாகத் தெரிகிறது. இந்தத் தேர்தலில் தங்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என இருவரும் பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன்…

Read More

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், பாரதிய ஜனதா கட்சி 27 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைமை இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இதில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய அமைச்சர் எல். முருகன் மற்றும் வானதி ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. தென் தமிழகத்தில் குறிப்பாக கன்னியாகுமரி மற்றும் நெல்லை மண்டலங்களில் முக்கியப் பிரமுகர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த விஜயதாரணி போட்டியிடுகிறார். பத்மநாபபுரம் தொகுதியில் ரமேஷ் மற்றும் குளச்சல் தொகுதியில் சிவக்குமார் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். தஞ்சாவூர் மேற்கு மாவட்ட நிர்வாகி நீக்கப்பட்ட சர்ச்சைக்கு மத்தியில், தஞ்சாவூர் தொகுதிக்கு முருகானந்தம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். புதுக்கோட்டை, அறந்தாங்கி மற்றும் திருப்பத்தூர் போன்ற தொகுதிகளிலும் கட்சி தனது வேட்பாளர்களை உறுதி செய்துள்ளது. இந்த இரண்டாம் கட்டப் பட்டியல் வெளியானதைத் தொடர்ந்து, பாஜகவினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். பாஜக வேட்பாளர்…

Read More