Author: Editor web3

18வது மக்களவையின் ஆறாவது அமர்வில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தை (MGNREGA) மாற்றுவதற்கான ஜி ராம்ஜி மசோதா உட்பட எட்டு அரசு மசோதாக்களுக்கு அவை ஒப்புதல் அளித்தது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 1-ம் தேதி தொடங்கியது. .19-ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.  டிசம்பர் 1 முதல் 19 வரை நடைபெற்ற நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இறுதியாக  இன்றுடன் முடிவுக்கு வந்தது. அதன்படி, மக்களவை வெள்ளிக்கிழமை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. இந்தக் காலகட்டத்தில், பல முக்கியமான மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன, விவாதங்கள் நடத்தப்பட்டன, மேலும் கூச்சல் குழப்பங்கள் எழுந்தன. ஆனால் நாட்டின் கவனத்தை ஈர்த்த ஒரு கேள்வி எஞ்சியிருந்தது: டெல்லி-என்.சி.ஆரில் ஏற்படும் கொடிய காற்று மாசுபாடு குறித்து நாடாளுமன்றத்தில் ஏன் முழுமையான விவாதம் நடத்தப்படவில்லை?  என்ற கேள்வி எழும்பியுள்ளது. இருப்பினும், இந்த அமர்வின் போது அவையின் உற்பத்தித்திறன் 111 சதவீதமாக இருந்தது, மேலும் எட்டு அரசு மசோதாக்கள்…

Read More

தமிழகத்தின் பாரம்பரிய காலை உணவு வகைகளில் மிகவும் பிரபலமான உணவான இட்லி இந்தியாவில் 2025ஆம் ஆண்டில் இணையத்தில் அதிகம் தேடப்பட்ட உணவுகளின் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. இட்லி என்பது தென்னிந்தியாவின் பிரதான உணவாக இருந்து வருகிறது. அனைவருமே விரும்பி சாப்பிடும் இந்த காலை உணவு, குழந்தைகளிலிருந்து முதியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றதாகும். என்னதான் இன்று நமது ஊர்களில் வித விதமாக புதிய உணவு வந்துவிட்டாலும், இட்லிக்கு இருக்கும் மவுசு என்றும் குறைவதில்லை. ஏனெனில் இட்லி செய்வது ரொம்ப எளிது, அதே நேரம் இதில் நம் உடலுக்கு கேடு விளைவிக்கும் எந்தப் பொருட்களும் கலக்கப்படுவதில்லை. முழுவதும் ஆவியில் வேகவைத்து சமைக்கப்படும் உணவு என்பதால், அனைவரின் தேர்வாகவும் இது இருக்கிறது. இந்தநிலையில், இந்தியாவில் 2025ஆம் ஆண்டில் இணையத்தில் அதிகம் தேடப்பட்ட உணவுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தின் பாரம்பரிய காலை உணவு வகைகளில் மிகவும் பிரபலமான உணவான இட்லி தான் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது…

Read More

பிரதமர் மோடி சமீபத்தில் ஜோர்டான், எத்தியோப்பியா மற்றும் ஓமன் ஆகிய மூன்று நாடுகளுக்கு விஜயம் செய்தார் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த விஜயத்தின் போது, ​​மூன்று நாடுகளின் உயர்மட்ட தலைவர்களுடன் அவர் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தினார், அதில் பல முக்கிய வர்த்தக ஒப்பந்தங்கள் அடங்கும். பிரதமர் மோடி இந்த நாடுகளின் வணிக மன்றங்களிலும் உரையாற்றினார். உலகளவில் இந்தியாவின் வளர்ந்து வரும் செல்வாக்கில் இந்த கௌரவங்கள் மற்றொரு மைல்கல்லைக் குறிக்கின்றன, பல நாடுகள் ஏற்கனவே மதிப்புமிக்க தேசிய விருதுகள் மூலம் மோடியின் தலைமையை அங்கீகரித்துள்ளன. இந்தநிலையில், கடந்த ஒன்பது ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடிக்கு 29 உலகளாவிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஓமன் தனது இரண்டாவது மிக உயர்ந்த தேசிய விருதான ஃபர்ஸ்ட் கிளாஸ் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் ஓமானை வழங்கி கௌரவித்துள்ளது. மே 2014 இல் பிரதமரானதிலிருந்து, அவர் 29 நாடுகளால் பல்வேறு விருதுகளால்…

Read More

ரஷ்யா-உக்ரைன் போரில் ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றிய 26 இந்தியர்கள் இறந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ரஷ்ய ராணுவத்தில் சட்டவிரோதமாக பணியாற்றிய 202 இந்தியர்கள் இருந்தனர். இந்த ஏழு பேர் காணாமல் போயுள்ளதாகவும், 119 பேர் மீண்டும் அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் 50 பேரை மீண்டும் அழைத்து வர முயற்சிகள் நடந்து வருகின்றன. கேரளாவை சேர்ந்தவர்கள் ரஷ்ய ராணுவத்தில் சிக்கித் தவிப்பதாக தகவல்கள் வெளியானதை அடுத்து, அரசு இந்த நடவடிக்கையை எடுத்தது. இந்த மாத தொடக்கத்தில், பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இந்தியாவுக்கு விஜயம் செய்தார். 23வது இந்தியா-ரஷ்யா ஆண்டு உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியா வந்திருந்த புடின், இந்தியாவுடன் பல முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட பிறகு நாடு திரும்பினார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் இந்திய வருகையை மத்திய அரசு மிகப்பெரிய வெற்றியாக வர்ணித்துள்ளது. இது எப்போதும் நினைவில் இருக்கும் ஒரு…

Read More

தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் பொதுக் கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோ–க்கள் தொடர்பான இறுதி வழிகாட்டு விதிமுறைகளை ஜனவரி 5 ம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரூரில், செப்டம்பர் 27 ம் தேதி, த.வெ.க. தலைவர் விஜய் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் பலியாகினர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, தமிழகத்தில் அரசியல் கட்சி தலைவர்களின் ரோடு ஷோ நிகழ்ச்சிகளுக்கும், பொதுக்கூட்டங்களுக்கும் வழிகாட்டு விதிமுறைகள் வகுக்கக் கோரி, த.வெ.க, அதிமுக மற்றும் தேசிய மக்கள் சக்தி கட்சிகளும், மதுரையைச் சேர்ந்த திருக்குமரன், பிரகாஷ் உள்ளிட்ட தனிநபர்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், 23 அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள், 40க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் கருத்துக்களைப் பெற்று,…

Read More

ஷெரீஃப் உஸ்மான் ஹாடி உயிரிழப்பை தொடந்து வங்கதேசத்தில் மீண்டும் கலவரம் வெடித்துள்ள நிலையில், இந்தியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை பதவியில் இருந்து வீழ்த்திய இளைஞர் இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஷெரீப் உஸ்மான் ஹாடி (Sharif Osman Hadi) கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, பங்களாதேஷில் மீண்டும் வன்முறைச் சூழல் உருவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கடந்த வாரம் டாக்காவில் உள்ள மசூதி ஒன்றிலிருந்து வெளியே வந்தபோது, அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளின் தாக்குதலுக்கு ஹாடி இலக்காகியிருந்தார். இதில் படுகாயமடைந்த அவர், சிங்கப்பூரில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (18) உயிரிழந்தார். 2024 போராட்டத்திற்குப் பின்னர் பங்களாதேஷ் தேர்தலுக்கான திகதியை அறிவித்த மறுநாளே இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அவர் அத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடத் தீர்மானித்திருந்ததாகக் கூறப்படுகிறது. அவரது மரணச் செய்தி வெளியானதும், நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் தலைநகர் டாக்காவில் திரண்டு போராட்டங்களை…

Read More

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில்,  தமிழக அரசியல் குறித்து முக்கிய ஆலோசனையை மேற்கொண்டு வருகிறது பாஜக தேசிய தலைமை.  இந்த நேரத்தில், பாஜக – அதிமுக அடங்கிய எண்டிஏ கூட்டணியை வலுப்படுத்த இருகட்சிகளின் தலைவர்கள் மும்முரம் காட்டி வருகின்றனர்.  என்டிஏ கூட்டணியில் இருந்து ஓபிஎஸ், டிடிவி என்று அடுத்தடுத்த முகங்கள் கழன்று சென்ற நிலையில், தமிழக பாஜக கூட்டணியில் என்ன நடக்கிறது என்று டெல்லி தலைமை கவனம் செலுத்திவருவதாக கூறப்படுகிறது. இப்படியாக, தமிழகத்தில் எண்டிஏ கூட்டணியில் குழப்பங்கள் நடந்து வரும் நிலையில்தான்,  தமிழக பாஜக தலைவர்கள் டெல்லி விரைந்து சூழ்நிலைகளை தெரிவிப்பதாகவும் தெரிகிறது. அதிலும், எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டு கூட்டணிக்குள் வரமாட்டோம் என்று கூறிவிட்டார் டிடிவி. அதோடு, கூட்டணியில் இருந்து வெளியேற, நயினாரின் மனநிலையும் செயல்பாடுமே காரணம் என்று கூறியிருந்தார். இருப்பினும்,  பாஜக தரப்பில் பாமக, தமாகா, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. ஆனால், பாமகவில்…

Read More

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது மற்றும் இறுதி டி20 போட்டி டிசம்பர் 19 இன்று நடைபெறுகிறது. இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் தற்போது ஐந்து போட்டிகள் கொண்ட T20 சர்வதேச தொடரில் விளையாடி வருகின்றன. நான்காவது போட்டி ரத்து செய்யப்பட்ட பிறகு, இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் இன்று டிசம்பர் 19 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகின்றன. இந்தியா தற்போது தொடரில் 2-1 என முன்னிலை வகிக்கிறது, எனவே அவர்கள் தொடரை வென்று சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்காவை தோற்கடிக்க முயற்சிப்பார்கள். இந்த போட்டியை எப்போது, ​​எங்கு பார்க்கலாம், நரேந்திர மோடி மைதானத்தில் இந்திய அணியின் சாதனை என்ன, இரு அணிகளுக்கும் சாத்தியமான பிளேயிங் லெவன்கள் என்ன என்பதைப் பார்ப்போம்… ஐந்தாவது மற்றும் இறுதி டி20 சர்வதேச போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்திய நேரப்படி மாலை 7:00 மணிக்குத் தொடங்கும், டாஸ் மாலை 6:30…

Read More

அரசியலில் களமிறங்கியுள்ள விஜய், தற்போது தென் மாவட்டங்களை குறிவைத்து மாநாடு நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் களமிறங்கும் நோக்கி தவெகவின் விஜய் தீவிர அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். முன்னதாக ரோடு ஷோ, மாநாடு என பல பிரச்சாரங்களை ஈர்த்த விஜய்க்கு கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது பெரும் அடியை கொடுத்தது. இதனால் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தனர். அதன் பிறகு மாநாடுகள் நடத்த சற்று இடைவெளி விட்டிருந்த விஜய், கடந்த சில நாட்களுக்கு முன் புதுச்சேரியில் மாநாட்டை நடத்தினார். இதனை தொடர்ந்து நேற்று ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற மாநாட்டிலும் விஜய்க்கு ஆதரவுகள் கிடைத்தன. மக்கள் கூட்டம் அலைமோதியது. இந்தநிலையில் தற்போது தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் களப் பணிகளில் தீவிரம்  காட்டி வரும் விஜய், இனிமேல் தென் மாவட்டங்களை குறிவைத்து மாநாடு நடத்தப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, வடக்கு டெல்டா, மேஎற்கு…

Read More

உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மை, அதிகரித்து வரும் பணவீக்க அச்சங்கள் மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவு போன்ற காரணிகள் முதலீட்டாளர்களை தங்கத்தின் பக்கம் திரும்ப கட்டாயப்படுத்துகின்றன. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து உச்சத்தில் இருந்து வந்த தங்கம் விலை இன்று மிகப்பெரிய குறைவை கண்டுள்ளது.  இன்று 22 கேரட் கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.12,380க்கு விற்பனையாகிறது. அதேபோல், ஒரு சவரன் ரூ. 480 குறைந்து ரூ.99,040க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை மேலும் உயரும் என வியாபாரிகள் கணித்திருந்த நிலையில், இந்த திடீர் சரிவால் நடுத்தர மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வெள்ளி விலை இன்று, கிராமுக்கு ரூ.3-ம், கிலோவுக்கு ரூ.34,000 குறைந்து, ஒரு கிராம் ரூ.221-க்கும், ஒரு கிலோ ரூ.2,21,000-க்கும் விற்பனை ஆகிறது.

Read More